வாழ்வின் மீதான ஆனந்தமும் பரவசமும் சுவாரஸ்யமும் குன்றாத ஒரு வளர்ந்த சிறுமி எப்படியிருப்பாள்?
மண்ணை தன் மனதாக பார்க்கிற ஒருத்தி
அவளொருத்தி
தங்க நகை விரும்பாத, பூக்களையும் குழந்தைகளையும் பெரிதும் விரும்புகிற ஒரு பெண் மனம் எப்படியிருக்கும்?
முகம் பார்த்து, கண்பார்த்து பேச்சுக்கு பேச்சு, வார்த்தைக்கு வார்த்தை உரையாடும் ஒரு ஊர்க்காரப் பெண் மனம் எப்படியிருக்கும்?
பெரியாரை உயர்த்திப் பிடிக்கிற அதே வேளையில் ஓஷோவை உள்வாங்கிப் பயிற்சி செய்கிற ஒரு பெண் மனம் எப்படியிருக்கும்? சரியான நோக்கத்திற்காக உதவியென ஒருவர் கேட்கையில் எதையும் தூக்கிக் கொடுக்கும் கனிந்த உள்ளமும், மிக அழகான- நேர்த்தியான பொருட்களைக் கண்ணுறுகையில் "ஐ எனக்கு…" என எடுத்துக்கொள்ள எத்தனிக்கும் ஆசையுமென - இரு வேறு எல்லைகளில் மாறுபட்ட குணங்களைக் கொண்ட ஒரு பெண் மனம் எப்படியிருக்கும்?
அகத்தையும் புறத்தையும் ஆரோக்கியமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ளும் சிந்தனையை ரத்தத்தில் கொண்டிருக்கிற அந்த பெண் மனம் எப்படியிருக்கும்?
அன்பு ஒன்றிற்காக தன் உலகத்தையே தூக்கிக் கொடுத்துவிடும் அந்தப் பெண் எப்படியிருப்பாள்?
வெயிலை,யானையை,சுவையான ஒரு பண்டத்தை, பருத்தி ஆடையை ரசிக்கிற ஒருத்தி எப்படியிருப்பாள்?
மனதின் எற்றத்தாழ்வுகளை அதன் இயல்புகளோடு சரியாய்ப் புரிந்துகொண்டு தலையாட்டுகிற ஒருத்தி எப்படியிருப்பாள்?
வாழ்வின் மீதான ஆனந்தமும் பரவசமும் சுவாரஸ்யமும் குன்றாத ஒரு வளர்ந்த சிறுமி எப்படியிருப்பாள்?
தவறுகளை அந்தக் கணத்திலேயே மன்னிக்கிற, மறந்துபோகிற அதே சமயம் சுயமரியாதையைத் தன் முந்தானைத் தலைப்பாக வைத்திருக்கிற ஒரு கரிசல்காரி எப்படியிருப்பாள்?
மண்ணை தன் மனசாகப் பார்க்கிற ஒருத்தி
வனப்பேச்சியை தானாகவே உருவகித்துக் கொள்கிற ஒருத்தி
தன் மறைந்த தந்தையை வாழ்வின் பிடிமானமாக வைத்திருக்கிற,
பிடிவாதமான அன்புக்காரி ஒருத்தி,
துரோகம் இழைப்பவர்களுக்கு மெளனத்தை மட்டுமே கொடுக்கிற ஒருத்தி,
தேநீரோடும் மழையோடும் - சிறு பறவைகள், சிற்றிலைகள், கானங்கள், மனதைப் பறித்தோடும் சின்னஞ்சிறு இசைக் குறிப்புகள், பயணங்கள், உரைகள், மிக தீர்க்கமான விவாதங்கள் என - சரியெனப் பட்டதை, மனதுக்குப் பிடித்ததை தன் உச்சரிப்பின் மூலம் காற்றில் பரவ விடும் நொடி மாயம் கொண்டவள்.
ஆழ்வார் பாசுரங்களில் துவங்கி சார்த்தர் வரை வளைந்து நீளும் பிடித்தமான ரசனை, ஸாபோவையும், ஆண்டாளையும் ஆதர்சமாகக் கொண்ட பைத்தியக்காரி,
தவறு செய்திடாத பட்சத்தில் பயம் என்பதறியா மனம்.
அவசரத் தருணங்களில் தனியொருத்தியாக களம் காணும் தைரியம்.
பிரியங்களின் ஆடுகளை மிகச் சரியாகக் கவனிக்கும் கிடையாட்டுக்காரி -
இவை அத்தனையும் ஒருசேர இருக்குமவள் -
சுமதி என்கிற தமிழச்சியைப் போல இருப்பாள்.
அவளொரு அவள்!
அண்மை
குறுஞ்செய்திகள்
அரசியல்
இலக்கியம்
தொடர்பு கொள்க
தென் சென்னை நாடாளுமன்ற
உறுப்பினர் அலுவலகம்
எண் 115, Dr முத்துலெட்சுமி சாலை,
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13,
அடையார், சென்னை - 600 020
புது தில்லி இல்லம்
சி-3, சிந்து அபார்ட்மெண்ட்,
எ பிளாக், எம் எஸ் பிளாட்ஸ், பி கே எஸ் மார்க்,
புது டெல்லி - 110 001
© 2022 தமிழச்சி தங்கபாண்டியன்.