முனைவர் த.சுமதி (எ)
தமிழச்சி தங்கபாண்டியன்

யூங்கின் "கூற்றுப்படி ‘முழுமையையும், சுயத்தையும்’ எனது கவிதைகள் வழி நேர்த்தியாகச் சொல்ல முயற்சிப்பவள். அவரது கூற்றுப்படியே ‘நனவு நிலையில் தனி மனுஷியாக இருந்தாலும், நனவிலியில் கூட்டு மனிதராக இருக்கிறேன்’. கவிதை என்பது முழுக்க ஒரு அக நிலைச் செயல்பாடு. ஆனால், அதில் எனது கூட்டு நனவிலி மனதையே முன்னிறுத்தி எனது படைப்பினை நிகழ்த்துவதில் ஒரு முக்கிய அரசியல் உண்டு